பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் 13 றோம். இத்திருப்பதியில் தீர்த்தம் வழங்கும் வழக்கமும் உண்டு; திருத்துழாயும் சந்தனமும வழங்குகின்றனர். இந்த எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலுமே மங்களாசாசனம் செய்துள்ளார்." திருவாய்மொழியில் ஒரே ஒரு மங்களாசாசனப் பாடலைத்தான் காண்கின்றோம். ஆயினும் இப் பாசுரத்தைச் சேர்ந்த பதிகம் முழுவதும் இத் திருப்பதி எம் பெருமானை மங்களாசாசனம் செய்ததே என்பது ஆசாரிய ஹிருதய ஆசிரியர் அழகிய மணவாளப் பெருமாள் காயனாரின் கருத்தாகும். இப்பதிகம் முழுவதையும் எம்பெருமான் சந்நிதியிலே பாடிப் பரவி எம்பெருமானிடம் விடை பெறுகின்றோம். இவ்விடத்தில் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங் காரின், 'அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள், முடிகின்றாள்; மூச்சு அடங்கு முன்னே, கடிதுஓடி பெண்பரிசு, ஆர், அங்குப் பிறப்பித்து மீளுவார் வண்பரிசா ரம்சிறந்த மாற்கு’’’ என்ற நாயக.நாயகி பாவனையிலுள்ள பாடல் நம் நினை வுக்கு வருகின்றது. ஆம்; உண்மைதான். இத்திருப்பதி எம் பெருமானின் திவ்வியமங்கள விக்கிரகத்தின் அழகில் ஈடுபட்டு. விட்டால், திருக்கோயிலை விட்டுத் திரும்ப மனம் வருவ தில்லை. அதுவும், நாம் நாயகி நிலையை அடைந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. இந்நிலை நமக்கு அவ்வளவு எளிதாக வரக்கூடுமா என்ன? எம்பெருமானை மனமாரச் சேவித்த மன நிறைவுடன் தம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். - - 18. திருவாய் 8:3:7 19 நூற். திருப். அந்தாதி.60.