பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவாட்டாற்று எம்பெருமான் வைணவ சமயத் தத்துவப்படி இறைவனுக்கு உருவம் உண்டு. அது திவ்வியமங்கள விக்கிரகம்’ என்று வழங்கப் பெறும். இந்த வடிவம் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் என்று ஐந்து வகை யோடு கூடியிருப்பதாகப் பேசப்பெறும். இவற்றுள் பரத்துவம் என்பது, எம்பெருமான் வைகுந்தத்தில் இருக்கும் நிலை யாகும். பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் நீளாதேவி சமேதராக அயர்வறும் அமரர்கள் என்று வழங்கப்பெறுகின்ற அனந்தன், கருடன், சேனை முதலியார் (விஷ்வக்சேனர்) முதலிய நித்திய சூரிகளுக்கும், சம்சாரத்தினின்றும் விடு பட்டவர்களான முக்தர்கட்கும் அநுபவித்தற்கு உரியவனாய் நித்திய விபூதியில் (பரமபதத்தில்) எழுந்தருளியிருக்கும் இருப்பேயாகும் இது. இங்குக் காலத்தால் உண்டாகும் பரிணாமத்திற்கு இடம் இல்லை. வியூகமாவது, லீலாவிபூதி யின் (இந்த உலகத்தின்) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை நடத்துவதற்காகவும், புயூட்சுக் களான சம்சாரிகட்கு வேண்டியவற்றைத் தந்து வேண்டாத வற்றைப் போக்கி அவர்களைக் காத்தற்காகவும், முமுட்சு களாய்" உபாசிக்குமவர்கட்குச் சம்சாரத்தைப் போக்கித் தன்னை வந்தடைவதற்குக் காரணமான அநுக்கிரகத்தைச் 1. விகுதி-நியமிக்கப்படும் பொருள். 2. முமுட்சுகள் மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள்.