பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 15 செய்வதற்காகவும் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற வடிவங்கொண்டு நிற்கும் நிலையாகும். விபவம் என்பது, தன்னை அடைந்தார்களைக் காப்பதற்காகவும்: அவர்களின் விரோதிகளைப் போக்குவதற்காகவும், வைதிக தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் அவ்வப் பொழுது இறைவன் மேற்கொள்ளும் அவதாரங்களாகும்." அந்தர்யா மித்துவமானது, எம்பெருமான் சேதனர்கட்குத் தோன்றாத் துணையாக அவர்கட்குள்ளே புக்கிருந்து அவர்களது இதய கமலத்தில் கட்டை விரலளவாக எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். அர்ச்சாவதாரமாவது, தனக்கென ஒருருவமும் ஒரு பேரும் இல்லாமல், சேதனர்கட்கு விருப்பமான பொன், வெள்ளி, தாமிரம் சிலை முதலான பொருளில் அவர்கள் விரும்பும் வடிவங்களையும் பெயர்களையும் ஏற்றுத் திவ்விய தேசங்களிலும், அடியார்களுடைய மாளிகையிலும் எழுந் தருளியிருக்கும் எம்பெருமானின் நிலையாகும்." இந்த ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் இருப்புக் களுள் அர்ச்சாவதாரத்தில் ஏனைய நிலைகளில் அநுபவிக்கத் தக்கனவான குணங்கள் யாவும் நிறைந்திருக்கும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இதுபற்றியே ஆழ்வார்கள் அனைவருமே இந்த அர்ச்சாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டு 108 திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் 'உள்ளுந்தோறும் தித்திக்கும் ' எம்பெருமான்களைப் பற்றித் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகத் தித்திக்கும்’ நாலாயிரம் பாசு 3. பகவத் கீதை 4 - 8. 4. இவற்றின் விவரங்களைத் தத்துவத்திரயம் - ஈசுவர பிரசரணம் சூத்திரம் (42-61)க்ளில் காண்க. 5. ஆசாரிய ஹிருதயம் - சூத்திரம் - 158. திருவாய் - 8 : 6 : 3. டிெ-4, 3 10 ஒப்பிடுக 8, 8 :4; 10, 7 : 2.