பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić மலைநாட்டுத் திருப்பதிகள் ரங்களை அருளியுள்ளனர். இவை யாவும் தொண்டர்கள் அமுதாகக் கொண்டு உண்ணும் சொல்மாலைகளாகத் திகழ் கின்றன. 'திருவாட்டாறு என்ற திவ்விய தேசம் மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. நாகர்கோவிலிலிருந்து பதினாறு கல் தொலைவிலுள்ளது இவ்வூர். நாகர்கோவிலிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. தொண்ணுாறு காசு தந்து பேருந்தில் ஏறி இவ்வூரை நோக்கிச் செல்லுகின்றோம். பேருந்தில் செல்லும்பொழுது இருபுறமுள்ள சோலைகள், தோட்டங்கள் நெல் வயல்கள், ஆறுகள், அவற்றினின்றும் கால்களாகப் பிரிந்து சென்று நிலங்களை வளமாக்கும் கால்வாய்கள் இவற்றைக் கண்டு அதுபவித்த வண்ணம் இவ்வூரை அடை கின்றோம். பேருந்தினின்றும் இறங்கிக் கிட்டத்தட்ட இரண்டு ஃபர்லாங்கு தூரம் நடந்து திருக்கோயிலை நண்ணு கின்றோம். ஆறும் அதன் கால்வாய்களுமாக ஊரையும் கோயிலையும் சூழ்ந்திருப்பதால் திருவட்டாறு - திரு வாட்டாறு” என்ற பெயர் ஏற்பட்டிருக்குமோ என்ற ஊகத் தில் இறங்குகின்றோம். திருக்கோயில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கோயில் சிறியதே. ஆயினும், அது பெரிய மதிற்கூவர்களால் சூழப்பெற்ற பெரும் பரப்பான இடத்தில் அமைந்துள்ளது. வெயில், மழை என்று பாராமல் எல்லாக் காலங்களிலும் கோயிலை வலம் வரவேண்டும் என்று விழையும் பக்தர்கட்கு வசதியாக இருப்பதற்கு மதிலுக்கு உட்புறமாகக் கோயிலைச் சுற்றிலும் கல் பரப்பப்பெற்ற நடைபாதை அமைக்கப்பெற்று அப்பாதையின் மீதும் கூடாரம் போன்ற கொட்டகை வேயப் பெற்றுள்ளது. பாதை மிகவும் அகலமானது. எம்பெருமான் ہے لیبرینیمتعیتنبwr.wت - ت - 8. திருவாய் 6, 4: 9.