பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 17 வாகனங்களில் அல்லது பல்லக்கில் அல்லது தோளுக்கினி யான் மீது உலாப் போவதற்குப் போதுமான அளவு அமைக்கப்பெற்றுள்ளது. நடைபாதையின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான பித்தளை விளக்குகள் அமைக்கப் பெற்றுள்ளன. நடைபாதையின் கூரையிலும் பல்வேறு வடிவ மான வண்ண விளக்குகள் தொங்குகின்றன. திருவிழாக் காலங்களில் இவ் விளக்குகள் யாவும் எரியவிடப்பெற்றுக் கண்கவர் காட்சியாக இருப்பதற்காகவே இவை நிரந்தரமாக நிறுவப்பெற்றுள்ளன. திருவனந்தபுரம் அரசர்களின் கட்ட ளைக்குக் கீழ் உள்ள கோயில்கள் இப்படித்தான் மிகக் கவனத் துடன் நடைமுறையிலிருந்து வரும் என்பதற்கு இத்திருக் கோவில் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இருப்பதாகக் கொள்ளலாம். தாம் வழிபடும் கடவுளர்களையும் இராஜ தர்பார்' நிலையில், உலாப் போகும் முனையில், காண விழைந்த அம்மன்னர்களின் பேருள்ளத்தையும் நாம் எண்ணிப் போற்றுகின்றோம். 'திருவாட்டாறு’ என்ற திருப்பதியை நம்மாழ்வாரே நமக்கு நன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றார். 'திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு’’’ (திகழ்கின்ற விளங்குகின்ற; திருமங்கை - பெரிய பிராட்டியார்; திருமாலார் - இலக்குமிநாதன்.) என்பதாக. அலர்மேல் மங்கை உறைமார்பன் வாழும் இடம் திருவாட்டாறு என்பது ஆழ்வாருடைய குறிப்பு. சாதாரண மாக உலக வழக்கில் எல்லோரும் திருவாளர் (சீமான்) என்று சொல்லப்பெறுகின்றனரே, அப்படி அன்று இங்கு, 9. திருவாய் 10. 9 ~2