பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 சிலைநாட்டுத் திருப்பதிகள் திருமங்கை தன்னோடு திகழ்கையினாலே, அஃதாவது (தன் மார்பில்) திருவுடன் (இலக்குமியுடன்) விளங்குகின்றவனா தவின் உண்மையிலேயே திருவாட்டாற்றான் திருவாளர்' என்ற அடைமொழிக்குப் பாத்திரனாகின்றான். இந்தத் திருவாளர் திருவாட்டாற்றான் மீது நம்மாழ்வார் மட்டிலும் ஒரு பதிகம்' பாடியுள்ளார்; வேறு ஆழ்வார்கள் திருவாட்டாற்றானை மங்களாசாசனம் செய்யவில்லை. எம்பெருமானைப் பெற வேண்டுமென்று ஆழ்வாருக்கு விடாய் அதிகமா? அல்லது ஆழ்வாரைப் பெறவேண்டும் என்று எம்பெருமானுக்கு விடாய் அதிகமா? என்று வைணவ பக்தர்களிடையே ஆராய்ச்சி நடைபெறுவதுண்டு. இதற்கு ஆழ்வாரே விடை அருளுகின்றார், வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்' (ஆர்வுற்ற- ஆசைப்பட்ட பாரித்து மிகவும் விரும்பி.) என்ற பாசுரத்தின் மூலமாக. இதனால் எம்பெருமான் ஆழ்வார்மீது கொண்ட விடாயே பெரிது என்பது தெளிவா கின்றது. . - திருவாட்டாற்றான்மீதுள்ள திருவாய்மொழி மிகம, அற்புதமானது; பன்முறை படித்துப் படித்து மனம் 565)yru வேண்டிய திருவாய்மொழி இது. சீவான்மா வேட்டை, சதா ஈடுபட்டுள்ள எம்பெருமான் திருவாட்டாற்றில் வந்து 10. திருவாய் 10, 5. !!. കേു. 8.6 : 10.