பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 19. பாடிவீடு அமைத்துக் கொண்டு தங்குகின்றான். ஆழ்வாரைத் திருநாட்டில் கொண்டு போய் அநுபவிக்க வேண்டும் என்று பாரித்து நிற்கின்றான். 'மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்துஇன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான், விதிவகையே:’** என்ற ஆழ்வாருடைய பாசுரத்தாலேயே இதனை அறியலாம் இதனை உளங்கொண்டுதான் ஈட்டின் ஆசிரியராகிய ம்பிள்ளை இப்பதிகத்தின் அவதாரிகை (முன்னுரை) தொடங்கும்பொழுதே "பொய்ந்நின்ற ஞாலம் (திரு விருத்தம்-1) தொடங்கி இவ்வளவும் வரை ஈசுவரனை ஆழ்வார் பின்தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை சர்வேசுவரன் பின் தொடருகிறபடி சொல்லு கிறது’*** என்று கூறியுள்ளார். அஃதாவது, இதுகாறும் ஆழ்வார் எம்பெருமானிடம் குறையிரந்து நின்றார்; இனி முனியே நான் முகனே' (திருவாய்மொழி 10. 10.) என்னும் பதிகத்தளவில் எம்பெருமான் ஆழ்வாரிடம் குறையிரந்து நிற்கின்றபடியைப் பேசத் தொடங்குகிறது என்பதாம். இது கருதியே திவ்வியதேசங்கள்தோறும் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களின் குணங்களைக் குறிப்பிடுங்கால் ஆசாரிய ஹிருதயம்’ திருவாட்டாற்று எம்பெருமானிடம் அடியார் கட்கு மோட்சத்தைக் கொடுக்கும் அளவில் அவர்கள் விதித்த ாடி செய்வானாய் அவர்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மை எல்லை கடந்து வெள்ளமிட்டோடும்’** என்று கூறுகின்றது. 12. திருவாய். 10, 6: 3 13. டிெ. 10. 6 (ஈடு: உரை அவதாரிகை காண்க). 14. ஆசா. ஹிரு. 184.