பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மலைநாட்டுத் திருப்பதிகள் இவ்விடத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங் கராச்சாரிய சுவாமிகள் கூறுவதும் உளங்கொண்டு மகிழத் தக்கது. அவர் கூறுவது: "ஆழ்வாரைப் பரமபதம் கொண்டு சேர்க்க வேண்டும் என்து விரையும் எம்பெருமான் ஆழ்வீர்! வாரீர், வாரீர்” என்று வேண்டுகின்றமை தெரிகின்றது. தவிரவும், அவருடைய உடல் விரைவில் மறையப் போகின்றது என்பதை அறிந்தவனாகையால், தன்னுடைய பணியின் விரைவையும் மறந்து ஆழ்வாருடைய திருமேனி அநுபவத்தில் அதிக ஆர்வங்கொள்ளுகின்றான். முன்பு ஆய்ச்சியரோடு குரலை கோத்தபோது பல உருவங்கள் கொண்டு அதுபவித்தது போலவும், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாயிரம் தேவிமார்களைத் துவாரகைக்குக் கொண்டு சென்று அங்குப் பதினாயிரம் உருவங்களை மேற்கொண்டு அதுபவித்ததைப்போலவும், பல உருவங்களை மேற்கொண்டு ஆழ்வாருடைய அவயவங்கள் தோறும் அதுபவிக்க விழைந்து அதற்கு இசைவு தருமாறு வேண்டுகின்றான். இதனை ஆழ்வார் மிக்க சிரமத்துடன் விடுவித்துக் கொள்ள வேண்டிய தாயிற்று.”** ஆயினும் எம்பெருமான் ஆழ்வாரைத் தொடர்வதில் சிறிதும் குறைவு ஏற்படவில்லை. 'பராத் பரனாயிருக்கும் எம்பெருமான் இப்படி நம்பக்கலில் பரதந்திரனாய்த் தாழ நிற்கின்றானே! இஃது என்ன அதிசயம்?' என்று அப்பெருமானின் சீலகுணத்தை அநுபவிக்கத் தொடங்கினார் ஆழ்வார். அங்ங்ணம் அநுபவிக்குங்கால் கைவல்காதுபவம் போன்ற தனியநுபவம் ஆழ்வாருக்குச் சுவை தரவில்லை. எனவே, நாட்டு மக்களோடு சேர்ந்து அநுபவிக்கலாம் என்று அவர்கள்பால் கண்வைத்தார். அவர்களோ உண்டியே உடையே உகந்தோடுவாராய்”* 15. திருவாய். 10. 5. (திவ்யார்த்த தீபிகை - உரை ஆவாாரிகை காண்க.) 16. பெரு, திரு. 3 : 4