பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 21 உலகியலில் ஐம்புல இன்பங்களில் மண்டிக் கிடந்தனர். அவர் களை நீக்கிப் பரம ரசிகனான எம்பெருமானுடன் தான் கூடி இக்குணத்தை அநுபவிக்கலாமே என்று அவன்மீதும் கண் செலுத்தினார். அவனோ ஆழ்வாரைக் கொண்டு போவதிலேயே கண்ணும் கருத்துமாக விரைந்து கொண் டிருப்பவனாதலால் இவருடைய அனுபவத்திற்குத் துணை புரிவதாகத் தோன்றவில்லை. எனவே, யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்' என்று சொல்லியவாறு எம்பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமான தானும் தம்மோடு இன்பதுன்பங்கட்கு உட்பட்டிருக்கின்ற நெஞ்சுடன் அநுபவிக்கின்றார். நெஞ்சே! அவனுடைய மேன்மையை நீ அறிவாய்; அங்ஙனம் மேன்மையுடையவன் நம்பக்கல் இப்போது தாழ நிற்கும் நிலையையும் காண்கின்றாய். நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தவாறு என்னே' என்று சொல்லிச் சொல்வி உள்குழைந்து இனியராகின்றார். வாட்டாற்று எம்பெருமான் மீதுள்ள திருவாய்மொழி ஆழ்வாரின் இந்த அநுபவ நிலையையே பேசுகின்றது. இந்த அநுபவ உணர்ச்சியுடன் நாம் அந்தத் தி ரு ப் ப தி எம்பெருமானைச் சேவிக்கின்றோம். “ஆதிகேசவப் பெருமாள்' என்பது இத்திருப்பதி எம் பெருமானின் திருநாமம்; தாயாரின் பெயர் மரகத வல்லி", மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் ஆதிசேடன்மீது கிடந்த திருக்கோலத்துடன் நமக்குச் சேவை சாதிக்கின்றான் எம்பெருமான். திருவனந்த புரத்திலிருப்பது போலவே, இங்கும் மூன்று சந்திதிகள் உள்ளன. மூன்று சந்நிதிகளின் அளவுக்கு நீளப் பள்ளி கொண்டுள்ளான் எம்பெருமான். இடப்புறச் சந்நிதி வழியாகத் திருமுகமண்டலக் காட்சி 17. பெரிய. திருவந். 26.