பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மலைநாட்டுத் திருப்பதிகள் தருகின்றான். நடுவிலுள்ள சந்நிதி வழியாக அவனுடைய திருவுந்திக் கமலத்தைக் கண்டு களிக்கின்றோம். வலப்புறச் சந்நிதி வழியாகத் திருக்கழல் இணைகள் நம் கண்கட்கு விருந்தாக அமைகின்றன. என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் கானாவே' என்ற பாண்பெருமாளின் அநுபவத்தைப் பெறுகின்றோம். இத்திருக்கோவிவில் கருவறை, அர்த்த மண்டபம் இவ்விரண்டின் தளங்களும் ஒரே கல்லினாலானவை. ஆகவே, அர்த்தமண்டபத்திலிருந்த வண்ணம் பிரசாதங்களைப் பெற்றால் கருவறையின் துய்மை கெட்டுவிடும் என்று கருதி, அங்கு அவை வழங்கப் பெறுவ தில்லை. அர்த்தமண்டபத்திலிருந்து இறங்கித் தரையிலிருந்த நிலையில் சந்தனம் திருத்துழாய் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நியதி இன்றும் வழக்கத்தி விருந்து வருகின்றது. எம்பெருமானைச் சேவிக்கும் பொழுது நம்மாழ்வாரின் உணர்வு நம்மையும் பற்றுகின்றது. நாமும் நம் நெஞ்சுடன் பேசுகின்றோம். “அருள் பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் - அருள்தருவான் அமைகின்றான்: அது நமது விதிவகையே’** (அடியார்தம் அடியனேன் - நம்மாழ்வார்; ஆழியான் . சக்கரப் படையேந்திய திருமால், நமது விதிவகையே - நாம் விதித்த கட்டளையின் படியேயாம்.) என்பதாக, எம்பெருமான் திருவாழியாழ்வான் முதலிய தித்திய சூரிகளிடம் காட்டும் அருளையெல்லாம் தன்னொருவன் பக்கல் மடைதிறந்து விட்டிருக்கின்றான் 18. அமலனா. 10. 49. திருவாய், 10, 5: !