பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 23 என்பது நம்மாழ்வாரின் குறிப்பு. தாம் எம்பெருமானைப் பற்றியிருப்பதனால் அவர் பக்கல் பாயும் எம்பெருமானது திருவருள் தன்வரையிலும் வெள்ளம் கோத்ததாகக் கருது கின்றார் ஆழ்வார். மேலும், நம்மாழ்வாரைப் பின்பற்றி நாமும் நமது பிறவியை யொழிக்கவேண்டும் என் ந எண்ணத் துடன், 'இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்; மருள்ஒழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவனங்கே’’’ (இருள் அறிவின்மை; ஞாலம் - உலகம்; மருள் - அறிவின்மை; மடநெஞ்சு அறியாமை பொருந்திய மனம்.) தம்மை விண்ணாட்டிற்குக் கொண்டு போகவே எம் பெருமான் காத்திருக்கின்றானாதலின் அவன் வழியே செல்லப் பார்’ என்று தன் நெஞ்சிற்குக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். உகந்தருளின நிலங்களிலேயே அவன் வந்து நிற்பது தம்மைக் கொண்டு போவதற்காகவே என்பது அவர் கருத்து. ஆழ்வார் தாம் இறைவனிடம் வேண்டியதற்கு மேற்படவே பெற்றவற்றை நெஞ்சிற்கும் குறிப்பிடுகின்றார். பொய்ந்நின்ற ஞானம், பொல்லா ஒழுக்கு, அழுக்குடம்பு ஆகிய விரோதிகள் கழிய வேண்டும் என்ற அளவே அவனை வேண்டியது. அவனோ திருவருளின் மடைதிறந்து விட்டு எத்தனையோ பேறுகளை அளித்துள்ளான். அவற்றை, 'வாட்டாற்றான் அடிவணங்கி மாஞாலம் பிறப்பு:அறுப்பான் கேட்டாயே மடநெஞ்சே! கேசவன் எம்பெருமானைப் 20. திருவாய். 10.6: !