பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மலைநாட்டுத் திருப்பதிகள் பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்புஒழிந்து நாரணனை நண்ணினமே.”** (ஞாலம் - பூமி இயல்பு - தொடர்பு, சம்பந்தம்; ஒழிந்துதவிர்த்து; நண்ணினம் - கிட்டப்பெற்றோம்.) என்ற பாசுரத்தில் விளக்குகின்றார் ஆழ்வார். 'கேசவன் எம்பெருமான்’ என்று இந்தத் திருப்பதி எம்பெருமானின் திருநாமமும் இப்பாசுரத்தில் குறிப்பிடப்பெறுகின்றது. எம்பெருமானின் திருவருளால் தாம் பெற்றவை யாவை? எம்பெருமான் கேசவன் தன் குழலழகைக் காட்டித் தன்னை ஆட்கொண்டான். பழவினைகளின் பற்று அறுந்துபோக, "பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் பாடலைத் தன்னைக் கருவியாகக் கொண்டு பாடுவித்துக் கொண்டான். இதனை ஆழ்வாரே அடுத்து வரும் பாசுரத்தில், "என்நெஞ்சத்து உள் இருந்து இருந்தமிழ்நூல் இவைமொழிந்து’’’ என்று கூறுவதையும் காண்கின்றோம். மேலும், இவ்வுலகத் தாரோடு தொடர்பு அறும்படி செய்தான் எம்பெருமான். அதற்குமேல் நாராயணனை எல்லாவித உறவுமாகப் பெறுவதற்கு வாய்ப்பும் ஏற்பட்டது. எம்பெருமானின் திருநாமங்களை வாய்விட்டுச் சொன்னதனால் இப்பேறு கிட்டியது. - நண்ணினம் நாராயணனை நாமங்கள் பலசொல்லி’** என்று இதனை முன்னுள்ள பாசுரத்தில் குறிப்பிட்டுள் ளார் ஆழ்வார். அன்றியும், திருவாட்டாற்று எம்பெரு T2 திருவாய், 10, 2.23. டி. 10.6:4 22. டிெ 1, 5, 11, 24 டிெ.10. 3