பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாட்டாற்று எம்பெருமான் 25 மான் இவருக்கு வீட்டுலகம் தருவதற்கு விரைகின்றான். இதனை, மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்துஇன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்: என்று ஆழ்வாரே சொல்லுகின்றார். பரமபதத்தில் எம் பெருமானுடைய திருக்குணங்கள் பகல் விளக்குப் போல் ஒளியற்றும் ஒளிகுன்றியும் காணப்பெறும். இந்த உலகில் அக்குணங்கள் இருட்டறையில் விளக்குபோல் ஒளிர்வதால் வளம் மண்ணுலகில் மிக்கதாயிற்று. விண்ணுலகம் தருவானாய்' என்பதற்கு நம்பிள்ளை அருளிச் செய்வது சுவைமிக்கது. அவர் கூறுவது: 'அங்கே ஒரு குடியிருப்பு மாத்திரம் கொடுத்து விடுவானாயிருக்கின்றிலன். வானவர் நாடு (திருவாய் 3, 9:9) ஆள்மின்கள் வானகம் (திருவாய் 10. 9: 6) என்ற பொதுவினை அறுத்து நமக்கே தருவானாக விரையா நின்றான்' என்பது. இதுகாறும் திருவாப் மொழியைத் தலைக்கட்டுகைக்காக இவ்வுலகில் அவரை இருக்கச் செய்தான். அச்செயல் முற்றுப்பெறும் நிலையிலிருப் பதால் இப்போது விரைகின்றான். தன் விருப்பப்படி ஆழ் வாரைக் கொண்டு போகச் சிறிதும் அவனுக்கு ருசி" இல்லை. இப்படிச் செய், அப்படிச் செய் என்று ஆழ்வார் விதிக்க, அதன்படி நடந்து கொண்டதால்தான் தனக்கு மன நிறைவு ஏற்படும் என்று அவன் கருதியிருப்பதனால் அந்த நியமனம் பெறுவதற்காக விரைகின்றான் என்பது குறிப்பு. 25. திருவாய் 10, 6 : 3 26. டிெ 10, 5 : 3 (பாசுரத்தின் ஈடு காண்க) 27. ருசி-செயல்களை அறிந்தே செய்வதற்குக் காரண மாயுள்ள சுவுை.