பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவட்டாற்று எம்பெருமான் 27 நோயால் மிகவும் துன்புற்றார். அரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை விட்டருளினார். அவற்றைக் கண்ட அரையர் நான் ஏறப்பெறுகின்றேன், நரகத்தை நகுநெஞ்சே என்று இவ்வடியைக் சொல்விக் கிரந்தியைப் (கட்டியைப்) பார்த்து நக்காராம். இந்நிலையில் தாம் பெற்ற பேறுகளை விரல்விட்டு எண்ணத் தொடங்குகின்றார் ஆழ்வார் : "தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என்அம்மான் நிலைபேரான் என்நெஞ்சத்து எப்பொழுதும்’** (மேல - மேல் உள்ளன; தாள் இணைகள் - இரண்டு திருவடிகள்.) என்பது அவரது திருவாக்கு. ஆழ்வாரைக் கரையேற்று வதற்கு எம்பெருமான் பெரிய திருவடியாம் செழும் பறவை தான் ஏறி வந்தான். அங்ங்ணம் வந்தவன் தன் திருவடிகள் இரண்டையும் ஆழ்வாருடைய தலைமீது வைத்தருளு கின்றான் : 'செவ்வரி ஒடி நீண்ட அப்பெரியவாய்' அழகிய திருக்கண்களால் அவரைக் குளிர நோக்குகின்றான்; நிலை பெயராமல் அவருடைய இதயத்தில் நிரந்தரமான குடியிருப்பும் கொள்ளுகின்றான். ஒரே காலத்தில் இம்மூன்று செயல்களையும் எங்ங்னம் செய்தனனோ என்று ஐயுறுவார்க்கு செளபரி (என்ற ஒரு முனிவர்) ஐம்பது வடிவு கொண்டாப்போலே எம்பெருமான் ஆழ்வாரை அநுபவித்தற்குப் பல வடிவுகள் கொள்ள நின்றான்” என்ற ஈட்டின் விளக்கம் தெளிவு பிறப்பிக்கும். 2. திருவாய், 10.6:6 33. அம்லனாதி-8,