பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மலைநாட்டுத் திருப்பதிகள் அடுத்த பாசுரத்தில் எம்பெருமான் தன் மனத்தில் குடியேறியதை வலியுறுத்தி அதனைச் சான்று காட்டியும் நிறுவுகின்றார் ஆழ்வார். 'குரைகழல்கள் குறுகினம்;நம் கோவிந்தன் குடிகொண்டான்; 接 冰 态 岑 家 வாட்டாற்றான் மலரடிமேல் விரைகுழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே.”** |குரைகழல்கள் . ஒவிக்கின்ற வீரக்கழல்கள்; குறுகினம். கிட்டப்பெற்றோம்; விரை - மணம்; குழுவு - திரண்டு) எமபெருமானுடைய திருவடிகள் கிட்டப்பெற்றதனால் அவன் ஆழ்வாருடைய உள்ளத்தையே நிரந்தரக் குடி யிருப்பாக்கிக் கொண்டான். "உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம்' என்று சொன்னவரன்றோ இவர்? அங்ங்ணம் குடியேறினவன் தனியாகக் குடியே ற வில்லை, பெரியாழ்வாரின் உள்ளத்தில், "அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும்தானும் அகம்படி வந்துபுகுந்து’’’ |அரவம்-பாம்பு அமளி-படுக்கை; அரவிந்தப் பாவைதாமரை மலரின்மீது இருப்பவள்; இலக்குமிi குடியேறியதைப் போலவே, இவர் உள்ளத்திலும் திருவாய்ப் பாடியிலுள்ள ஐந்து இலட்சம் குடிகளோடும் ஆநிரை களோடும் குடியேறினனாம். எம்பெருமான்மீது சாத்தப் பெற்றிருந்த நறுமணம் திரண்டு கமழ்கின்ற திருத்துழாய் தன் உடம்பில் நிலை நின்று நாறுவதே இதற்குச் சான்றாகும் 34. திருவாய். 10.51. 35. பெரிய திருவந், 68. 36. பெரியாழ், திரு. 5.2 : 1.0