பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவட்டாற்று எம்பெருமான் 29 என்கின்றார் ஆழ்வார். இத்தகைய திருவருளுக்குப் பாத்திரமாவதற்கு என்ன நன்மை செய்தேனோ? அறியக்கூட வில்லையே' என்ன மயங்குகின்றார். 'எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே?' (நன்றி - நன்மை; திகழ்வது - விளங்குவது) என்பது ஆழ்வாருடைய திருவாக்கு, இங்கு ஈடு: பெரிய வுடையாரைப் (சடாயு) போலே தடையோடே முடித் தேனோ? (சிறிய) திருவடியைப் போலே (அதுமான்) 'கண்டேன் சீதையை' என்று வந்தேனோ? அன்றியே தன்னுடைய ஆணையைப் பின்பற்றினவன் ஆம்படி விதித்த கருமங்களைச் செய்து போந்தேனோ? என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சில் புகுந்த பின்பு பெறாப்பேறு பெற்றாப்போலே விளங்கா நின்றான்'. இவ்வுரை ஆழ்வாரின் மயக்கத்தை நன்கு விளக்குகின்றதன்றோ? "பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறலாகும் என்ற ஒரு பழமொழி உண்டு. அதனைத் திருவாட்டாற்று எம்பெருமான் தம் விஷயத்தில் உண்மை யாக்கி விட்டான் என்று களிப்படைகின்றார் ஆழ்வார். “எய்தா நின்கழல் யான் எய்த ஞானக்கை தா' என்றும், "எனக்கே ஆட்செய் எக்காலத்தும்" என்ன வேண்டும் என்றும், முகப்பே வேண்டிப் பணி கொள்வாய்'*' என்றும் ஆழ்வார் வேண்டிக் கொண்டபடியே எம்பெருமான் ஆழ்வாரின் பிறப்பினை வேருடன் அறுத்து நித்தியமாகச் செய்யப்படுகின்ற தொண்டினையும் அவருக்கு நல்கினான். இவை இரண்டும் அவனருளால் பெற்ற பெறுதற்கரிய பேறு களாகும். 37. திருவாய். 10, 6: 8, 38. டிெ. 10. 6, 8 (பாசுரத்தின் ஈடு காண்க.) 39. டிெ 2, 9: 2. 40. டிெ. 2, 9; 3, 41. டிெ, 8. 5; 7.