பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவட்டாற்று எம்பெருமான் 3i கவி' என்றார்: இவரோ அங்ஙனம் பேசாமல் செவிக்கினிய செஞ்சொல் என்கின்றார். இப்பாசுரங்கள் இவரையே உளுக்கி விடுகின்றன. “என் நாவில் இன்கவி' என்று சொல்லியவரன்றோ இவர்? நிலவுலகிலிருந்து செல்லும் முக்தர்களை நோக்கி நித்தியசூரிகள் நிலவுலகில் சிறப்பான செய்தி உண்டா? என்று வினவ, அவர்கள் திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வார் என்பார் ஒருவர் தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் தொடுத்தார்; அவற்றைக் கற்ற பெருமையாலே இங்கு வந்தோம்; இதுவே சிறப்பான செய்தி என்பார்கள். அவர்கள் யாதாவது ஒரு திருவாய் மொழியைப் பாடுமாறு கேட்க இவர்கள் வாட்டாற்று எம்பெருமான் மீதுள்ள திருவாய்மொழியைப் பாடுவார்கள். கேட்டவர்கள் இன்னும் சொல்க, இன்னும் சொல்க என்பார்களேயன்றி, கேட்ட அளவில் மனநிறைவு கொள்ளார் கள். இங்ஙனம் கேட்டபோதே இனிமை பயப்பதற்கு நினை வும் சொல்லும் ஒருமைப்பட்டிருக்கையாலே’ என்பது ஈடு’ குறிக்கும் காரணமாகும். சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே' என்று கூறிய வரன்றோ ஆழ்வார்? இந்தத் திவ்விய தேசத்தின் திருக்குணத்தை ஆசாரிய ஹிருதயம், மோட்ச ஸ்தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரைபுரளும்' (மோட்சஸ்தானம் - மோட்சம் கொடுப்பதில்; பிரணதர். அடியார்கள்; வளம் மிக்க நதி - வாட்டாறு) என்று பேசும் அடியார்க்கு அந்தமிழ்ப் பேரின்ப வீடு அருளும் போது, அவர்கட்கு வசப்பட்டுக் கொடுக்கும் பாரதந்திரிய குணம் விளங்கும் என்பது இச்சூத்திரத்தின் கருத்தாகும். 44. திருமாலை. 45. 45. திருவாய். 3. 9: 1. 46. துெ. 6. 5:11.