பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மலைநாட்டுத் திருப்பதிகள் ஆழ்வார் அருளிய திருவாய்மொழியைப் LIITtą. அதுபவித்த நிலையில் திருக்கோயில் பிரசாதத்தைப் பெற்று நம் இருப்பிடம் திரும்புகின்றோம். திவ்விய தேச யாத்திரை யில் பல இடங்களில் அதிகமாக நடக்கவேண்டி வரும்; கால நிலைகளாலும் உடல்நிலைக் கோளாறுகளாலும் நடப்பது சில சமயம் பெருந்துன்பமாகத் தோன்றவே செய்யும். என்றாலும் அயோத்தி அண்ணல் நடந்ததைவிட நாம் அதிகமாக நடந்துவிடவில்லை என்று நினைக்கவும் தோன்றும். இந்நிலையில், "மாலை முடிநீத்து மலர்ப்பொன் அடிநோவப் பாலைவனம்புகுந்தாய் பண்டுஎன்று சாலவும்.நான் கேட்டால் துயிலேன் காண் கேசவனே! பாம்புஅணைமேல் வாட்டாற்றுக் கண்துயில்கொன் satirii”*** என்ற திவ்விய கவியின் பாடல் நினைவிற்கு வருகின்றது. அதனைச் சிந்தித்த நிலையில் நம் நடைத்துன்பம் நீங்க மகிழ்ச்சியுடன் நம் இருப்பிடத்தை நண்ணி இளைப்பாறு கின்றோம். ', ஆசா. ஹிரு. 184 .ே காற். திரு.அந்தாதி 68