பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 65 நங்கண்ணாலம் அல்லவோ என்று திருவுள்ளமானாராம். அவர்தாம் ஆறாந் திருநாளிலே சேவித்திருக்கச் செய்தே . நாம் உனக்குச் செய்யவேண்டுவது என்? என்று கேட்டள, தேவரீர் தந்தருளின சரீரத்தைக் கொண்டுபோரக்காரியங் கொண்டேன்; இனிப்போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது என்ன, வாராய் மெய்யே இளைத் தாயாகில் இங்கனே இரு என்று அருளிச் செய்தார்; பெருமாள் நடுவில் திருவாசலுக்கு அவ்வருகே எழுந்தருளுங் காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.' நம்பியின் மனோரதம் ஓயாது எண்ணி மகிழத்தக்கது. அடுத்து திருவாறன்விளையின் புகழைப் பாடுவதால் ஏற்படும் பலன் சொல்லப்பெறுகின்றது. "நீடு மதிள்திரு வாறன்விளை உலக மலிபுகழ் பாடநம்மேல் வினைஒன்றும் நில்லா கெடுமே' " (மலி-நிறைந்த வினை-கருமங்கள்.) என்ற பாசுரப் புகுதியால் இதனை அறியலாம். பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய்ய வேண்டா, பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப்போம்” என்ற இன்சுவைமிக்க ஈட்டின் உரை இதனைப் பின்னும் நன்கு விளக்குகின்றது. புகழ்பாடுதல் பால் குடிப்பது போன்ற எளிமையான செயலாகும் என்றவாறு. இதனை ஆழ்வார் அடுத்த பாசுரத்திலும், 25. திருவாய். 7. 10:4. (ஈட்டின் தமிழாக்கம் காண்க.) 26 ഒു. 7, 10:5, سم 5 سس