பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 67 மன்ற பாசுரப் பகுதி இதனை உணர்த்துகின்றது. ஆனைக்கு இடராவது உயிர் தொலைகின்றதே என்கின்ற இடர் அன்று; மிகவும் சிரமப்பட்டுப் பறித்த மலரை இறைவன் திருவடி களில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று உண்டான இடர். அந்த மலரைப் பெறுவதற்காகவே பரமபத நாதன் அலை குலைய நிலை குலையப் பதறி ஓடி வந்தான் என்பது ஆசாரியர்கள் தரும் விளக்கம். கரையில் அர்ச்சை வடிவில் இருக்கும் எம்பெருமான் மலரைப் பெறுவதற்கு நகர்ந்துவர முடியாதல்லவா? இன்னொரு விளக்கமும் உண்டு: நம் அடியாக எம்பெருமானுக்கு என்ன அவத்யம் (குறைவு, குற்றம், மாசு) விளைகின்றதோ என்று தோன்றிய இடராகவும் கொள்ளலாம். அஃதாவது, பரம பக்தனான யானை அரசனைக் காத்தருளாத எம் பெருமான் இரட்சகன் எனத் தகுதியுடையவன் அல்லன் என்று உலகோர் சிந்தாந்தம் செய்துவிடப் போகிறார்களே என்று யானை இடர்ப்பட்டதாகவும் கொள்ளலாம். அந்த யானை அரசனைப் போலவே நம்மாழ்வாரும் திருவாறன்விளை எம்பெருமானைச் சரணம் அடைகின்றார். "வாணனை ஆயிரம் தோள்துணித் தான்.சரண் அன்றிமற் றொன்றிலமே' (வாணன்-பாணாசுரன் என்ற அசுரன்.) என்ற பாசுரப் பகுதியால் இதனை அறிகின்றோம். "மறந்தும் புறந்தொழா மாந்தரின் தலைவராகிய ஆழ்வார் திருவாறன்விளை என்ற திருப்பதியே தனக்கு ப்ராப்யம் (அடைய வேண்டிய இடம்) என்றும், அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதன் (கருவி ജ-l 30. திருவாய். 7. 10: 7.