பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவான்விளைத் திருக்குறளப்பன் 69. (உள்ளம்-ஆன்மா சார்வல்லவாகி தீண்டாதனவாகி; தெளிவிசும்பு-பரமபதம்; உள்ளம்-மனம்; மேவி-பொருந்தி.3 தீயவினைகள் ஆன்மாவைத் தீண்டாதனவாகி நீங்கத் தாம் பரமபதத்தை அடையலுற்றாலும், தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருட்படுத்தாது திருவாறன்விளையினைப் பொருந்தி வாழவேண்டும் என்று நினைக்கின்றது என்று ஆழ்வார் அத்திருப்பதியின்மீது தமக்குள்ள அதிகமான பரிவினை வெளியிடுவதைக் காண்க. அடுத்து, தாம் நினைவில் தம் கொண்டிருப்பவை அனைத்தையும் அறியவல்லவரான எம்பெருமான் அறிவான் என்கின்றார் ஆழ்வார். தாம் திருவாறன்விளை திரித்தனுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்புதான் மனமானது வேறு ஒன்றினை நினையாது என்பதை அவன் அறிவான் என்பதை வெளியிடுகின்றார். சிந்தையினைால் நினைக்கப்படுவதான வஞ்சனைகள் அவன் அறியாதன ஒன்றுமில்லையன்றோ? சிந்தைமற்று ஒன்றின் திறத்தது.அல் லாத்தன்மை தேவபி ரான்அறியும் சிந்தையினால் செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை’** (சிந்தை-மனம்; மற்று ஒன்று.பரமபதம்: தேவபிரான் . எம்பெருமான்; மாயங்கள்.வஞ்சனைகள்). ஈண்டு பரமபதம் என்ற பெயர் சொல்லுதலும்கூடத் தமக்கு விருப்பமின்மையின் மற்று ஒன்று என்கின்றார். இந்த எண்ணங்களுடன் திருக்கோயிலினுள் நுழை கின்றோம். திருக்குறளப்பன் என்பது இத் திருப்பதி எம்பெருமானின் திருநாமம்; தாயாரின் பெயர் பத்மாசன 33. திருவாய், 7, 10; 10,