பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70, மலைநாட்டுத் திருப்பதிகள் காச்சியார் (தாமரையாள்). நின்ற திருக்கோலத்தில் வடக்கே திருமுகமண்டலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் இந்த எம்பெருமானைச் சேவிக்கின்றோம்; அன்னை யாரையும் வணங்குகின்றோம். அவன் சந்நிதியிலேயே திருவாறன் விளைத் திருப்பதிகத்தை நெஞ்சுருக ஓதி மகிழ்கின்றோம். இந்நிலையில், 'சென்று புனல்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும், வென்று புலன்அடக்கி விட்டாலும், இன் தமிழால் மாறன் விளைத்த மறைஒதார்க்(கு) இல்லையே ஆறன் விளைத்திருமால் - அன்பு' 外悠强 (புனல் - நீர் மாறன் . நம்மாழ்வார்: மறை திருவாய் மொழி: * என்று திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாசுரம் நினைவிற்குவர, அதனையும் ஒதுகின்றோம். பக்தி உணர்வு நிரம்பிய நிலையில் எம்பெருமானுடைய பிரசாதங் களைப் பெற்று நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 34. நூற். திருப். அந்தாதி. 70.