பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருச்செங்குன்றுர் அப்பன் பரமபத நாதனாகிய நாராயணன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அந்தர்யாமியாய் இருந்து கொண்டு அவரவருடைய செயல்கட்கும் ஏவுபவனாயிருக்கின்றான் என்பது வைணவ சமயக் கோட்பாடு. இக்கருத்தினை எல்லா ஆழ்வார்களுமே தத்தம் பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்நிலையில் எம்பெருமான் நாம் நல்வினை காரணமாகச் சுவர்க்கத்தை அடைதல், தீவினை காரணமாக நரகில் புகுதல், நல்வினை தீவினை ஆகிய இரண்டன் காரணமாகக் கருப்பத்தை அடைதல் முதலிய எல்லா நிலை களிலும் நமக்குத் துணையாய் இருப்பான் என்றும், அழகே குடி கொண்டுள்ள மங்களமான திருமேனியுடன், நமக்குத் தியான ருசி பிறக்கும்போது தியானத்திற்கு உரியவனாதற் காகவும், நம்மைக் காப்பதற்காகவும், நமது இதய கமலத்தில் எல்லா ஆபாணங்களாலும் அலங்கரிக்கப்பெற்றவனாய்ப் பெரிய பிராட்டியாருடன் கட்டை விரலளவாய் எழுந்தருளி யிருப்பான் என்றும் வைணவ நூல்கள் பகர்கின்றன." அந்தர்யாமித்துவத்தைத் திருமழிசையாழ்வார் மிக அழகாகக் குறிப்பிடுகின்றார்; “நின்றது.எந்தை ஊரகத்து, இருந்தது.எந்தை பாடகத்து அன்றுவெஃக ணைக்கிடந்த(து) என்னிலாத முன்னெலாம், 1. தத்துவத் திரயம்-ஈசுவர பிரகரணம் 57, 2. டிெ 58.