பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலைநாட்டுத் திருப்பதிகள் அன்று நான்பி றந்திலேன்.பி நந்ததன்பின்ம றந்திலேன், நின்றதும் இருந்த ததும்கி டந்ததும்என் நெஞ்சுளே’ (பிறந்திலேன் - ஞானப்பிறப்பு பெறவில்லை) ஊரகம், பாடகம் என்பன காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோயிலின் வெளிப் பிராகாரத்திலுள்ள சந்நிதிகள்: வெஃகணை என்பது, திருவெஃகா; காஞ்சியிலுள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதி. நம்போலியர்களிடம் கைங்கரியக் கடனைப் பெறுவதற்காகவே ஊரகத்தில் நின்று பார்க்கின்றதாகவும், பாடகத்தில் வீற்றிருந்து பார்க்கின்ற தாகவும், திருவெஃகாவில் சாய்ந்து பார்க்கின்றதாகவும் கருதுகின்றார் ஆழ்வார். தாம் ஞானப்பிறப்பை அடைவதற்கு முன்பெல்லாம் இங்கனம் செயல் புரிந்த எம்பெருமான், அதனை அடைந்த பிறகு இச்செயல்களைத் தம் இதயக்கமலத்தில் மேற்கொள்வதாகக் கருதுகின்றார் அவர். விஷ்ணுவை என்றும் இடையறாது தம்மனத்தில் நிலை நிறுத்துதலால்'விஷ்ணு சித்தர் என்ற திருநாமத்துடன் விளங்கும் பெரியாழ்வார், '.. "அரவுத்து அமளியி னோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல் ம்ோதப் பள்ளிகொள்கின்ற் பிரான் 3. திருச்சித். விகுதிக், 4. பெரியாழ். திரு. 5, 2, 10,