பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் 73 {அரவத்துஅமளி - பாம்புப் படுக்கை; அரவிந்தப் பாவை . தாமரையில் வாழும் பெரிய பிராட்டியார், அகம் - உடல்; பரவை - திருப்பாற்கடல்; திரை - அலை.) என்று உளம் மகிழ்ந்து கூறுவர். 'உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்' என்றும், பனிக்கடவில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடிவந்து என், மனக் கடலில் வாழ வல்ல மாயமணாள நம்பி' என்றும் பேசுகின்றவரன்றோ இவர்? ஆழ்வார்களுள் நாயகமாய் விளங்கும் நம்மாழ்வாரும் அந்தர்யாமித்துவத்தைப் பல இடங்களில் பறைசாற்றுவார். ஓரிடத்தில் எம்பெருமான் தம் சிந்தையுள் இருப்பதை இவ்வாறு பேசுகின்றார்; அர்ச்சை வடிவிலுள்ள எம் பெருமான் தம் இதயகமலத்தில் வீற்றிருப்பதாகப் பகர் கின்றார். பாசுரம் இது: 'திருச்செங்குன்றுாரில் திருச்சிற்நா றதனுள் கண்ட அத் திருவடி என்றும், திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும், திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலைமார் பும்செய்ய வுடையும் திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழஎன் சிந்தையு ளானே’’ (திருவடி - எம்பெருமான் என்றும் - இடைவிடாது; கமலம் - தாமரை; செய்ய சிவந்த உந்தி - கொப்பூழ்; கமலை. பெரிய பிராட்டியார்; உடை - பீதக ஆடை ஆரம் - மாலை; படை - ஆயுதங்கள்.) 5. பெரியாழ். திரு. 5. 4. 5. 6. டிெ. 5. 4. 9: பள்ளிகோள் - பள்ளி கொள்ளுதலை; பழகவிட்டு - பழகியதாக விட்டு, 7. திருவாய், 8. 4:7.