பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலைநாட்டுத் திருப்பதிகள் இதில் கட்டைவிரல் பருமன் அளவு தன் இதய கமலத்தில் வீற்றிருக்கும் வடிவழகை வாயாரப் பேசுகின்றார் ஆழ்வார். திருச்சிற்றாற்று எம்பெருமான் செந்தாமரை போன்ற கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஒடி நீண்ட அப்பெரியவாய' திருக்கண்களையுடையவன்; அத் திருக்கண் நோக்கினால் பிறந்த உறவை நிலை நிறுத்திக்கொள்ளும் புன்முறுவல் பொலிந்த திருப்பவளத்தையுடையவன்; அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றவர்கள் வீழ்ந்து வணங்கத் தக்க திருவடிகளையுடையவன்; அப்படி அணைக்கப்பெற்றவர் கட்கு நாடோறும் அநுபவிக்கத் தக்கதாய் அழகுக்கு எல்லையாய், முனிமாப் பிரம முதல் வித்தாய்'த் திகழும் திருநாபியையுடையவன்; சேதனர்கட்குப் பற்றாசாக இருக்கும் பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாகவுள்ள திருமார்பையுடையவன்; இத் த ைக ய எம்பெருமான் திருமேனிக்கு ஏற்ற பீதக ஆடையைத் தரித்துக்கொண்டு அடியார்களின் அச்சம் தீரும்படி காப்புக்குக் குறிப்பாக இருந்து வரும் திருஅபிடேகமும் திவ்விய ஆயுதங்களும் விளங்க என்றும் இடைவிடாது தன் சிந்தையில் இருப்பதாகக் கூறுகின்றார் ஆழ்வார். இவரே பிறிதோரிடத்தில் தம் உள்ளத்தில் எம்பெருமானின் நிரந்தரக் குடியிருப்பை, 'கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்(று) ஒழிந்தனகொல்? ஏ பாவம்-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேன துள்ளத் தகம்' 8. அமலனா. 8. 9. பெரிய திருவந். 56.