பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் 75 (கல் - திருவேங்கடமலை, கனைகடல் - ஒலிக்கின்ற பாற் கடல்; வான்நாடு . வானுலகம்; புல்லென்று - அற்பமாய்; வெல்ல . மிக நெடியான் - உயர்ந்தவன்; உள்ளம் - நெஞ்சம்) என்று பேசினவரன்றோ? திருச்செங்குன்றுாரைப்பற்றி முன்னரே அறிந்துள்ளோம். திருவாறன்விளைத் திருப்பதி எம்பெருமானை முற்பகலில் சேவித்துப் பகலுணவிற்குச் திருச்செங்குன்றுாரை அடை கின்றோம். உணவு விடுதியில் உணவு கொண்டு அங்கேயே இளைப்பாறுகின்றோம். மாலை ஐந்து மணி வரையில் காலம் செல்லவேண்டுமே; கேரளத்தில் திருக்கோயில்கள் மாலை ஐந்து மணிவரையில் திருக்காப்பிடப்பெற்றிருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்தச் சிற்றுாரில் தங்கி இளைப்பாற வசதி குறைவாக உள்ளதால் இருப்பூர்தி நிலையத்திலேயே வந்து நேரத்தைக் கழிக்கின்றோம். அந்நிலையமும் இயற்கைச் சூழலில் அமைந் திருப்பதால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புற்ற வண்ணம் பொழுது நன்கு கழிகின்றது. ஒழிந்த நேரத்தில் ஆழ்வார்கள் பாசுரங்களைப் படித்து அநுபவித்த வண்ணம் இருக்கின்றோம். மாலை நாலரை மணிக்குக் கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு திருக்கோயிலுக்குப் போகச் சித்தமா கின்றோம். இயற்கை அன்னையின் எழிவில் ஈடுபட்டவண்ணம் கோயிலை நோக்கி நடைகட்டுகின்றோம். கோயிலை நோக்கி வருங்கால் ஊருக்குள் புகுந்தே வருகின்றோம். ஊர் செழிப்பான ஊரே. தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றுார்' என்று ஆழ்வார் சிறப்பித்துள்ளதையும் நினைவுகூர்கின்றோம். அந்தக் 10. திருவாய். 8, 4:3.