பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பேண் தர்க்கம் வாங்கிக்கிட்டு வந்தேண்டி வஞ்சகம் இல்லாமலே ராங்கிஇனிப் பண்ணுகேடி-என்ஆசைக்கண்ணுட்டி நடந்துவாடி தொடர்ந்தாற்போலே என்நேசக்கண்ணுட்டி. ஓடும் ஜோடி சும்மாசும்மாப் பார்த்துக்கிட்டுச் சொகுசுநடை நடத்துக்கிட்டுக் கம்மால்ரொம்பக் காட்டிக்கிட்டு கணக்காப்போகும் கறுத்தபெண்ணே. ஆருண்ணு நெனச்சுக்கிட்டு அம்புட்டுப் பேசவக் காய் பேரெடுத்த போக்கிரியின் - பெண்டாட்டி கானுபாரு. அண்ணேக்குச் சொன்னசொல்லு அம்புட்டையும் மறந்திட்டையோ கண்ணுட்டி உன்னலே கலங்குறேண்டி இந்தவேளே. மூட்டைமுடிச்சுக் கட்டிக்கிட்டு மொத்தரூபா எடுத்துக்கிட்டு ரோட்டுவழி போறபோது புருசன்பார்த்தால் என்னசொல்வேன்? உன்புருசன் வல்லவனே உஸ்தாதியோ குஸ்திக்காரனே ஒட்டம் பிடிக்கலாண்டி ரெங்கோன்கப்பற் குள்ளேன்றி. எத்தனையோ கோடிஜனம் இம்சைப்பட்டார் பெண்களாலே சத்தியமாச் சொல்லுறேன். நான் பத்தினிதான் உண்மையிலே,