பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 93 யோக்கியமாய்ப் பேசுற என் யோசனையுள்ள மச்சானே பாக்கியங்தான் நான் பெற்றேனே-கண்ணுமச்சானே பந்து சனமெல் லாம்புகழப் பொன்னுமச்சானே. 64 ஆட்டுக்கிடாய் நாலடிச்சு ஆயிரம்பேரைக் கூப்பிட்டு அழகான விருந்துவச்சு-கண்ணுத்தங்கமே ஆசையைத் தீர்க்கனுமே-கட்டித்தங்கமே. 55 ஏழைகளும் பாழைகளும் எங்கிருந்தாலும் கூப்பிட்டு வாழை இலை போட்டுச்சோறு-கண்ணுமச்சானே. வரிசையாக் கொடுக்கனுமே - பொன்னுமச்சானே. 56 மாமன்மார் மச்சான்மார் மத்தவங்க எல்லாருக்கும் மாலேகூடப் போடணுமே-கண்ணுத்தங்கமே மரியாதைகள் செய்யனுமே-கட்டித்தங்கமே, 57 அண்ணனுக்கும் அக்காளுக்கும். அதிசயத் துணிவாங்கனும் தம்பிக்கும் தங்கச்சிக்கும்.கண்ணுமச்சானே தாராளமாத் துணிவாங்கணும் - - பொன்னுமச்சானே: 58 கொட்டு முழக்கத்தோடே கொண்டாடும் வரிசைகளே கொண்டுவந்த பேருக்கெல்லாம்-கண்ணுத்தங்கமே கொடுக்கணும்பதில் சீர்வரிசை. கட்டித்தங்கமே. 59