பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 143 காயங்குளத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ காய்கறியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 36 கண்டிகொழும்பு தேசம்போய் - ஏலங்கிடி லேலோ கடைச்சாமான் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. ჭ7 நாகலாபுரம் நாகசுரம் - ஏலங்கிடி லேலோ நாம் ஒழுங்கு செய்யனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 38 நல்லநாள் எல்லாம்பார்த்து - ஏலங்கிடி லேலோ நல்லமுகடர்த்தம் வைக்கனும் - ஏலங்கிடி லேளோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 39 ஊர் நாடெல் லாம் அறிய - ஏலங்கிடி லேலோ ஒழுங்காத்தாலி கட்டணுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - காம் ஏது செய்யலாம் மாமா. 40 காதலன் விடை மானுமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மருக்கொழுந்து வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ இன்னும் என்ன வேனும் பெண்ணே - உனக் கேது வேணும் கண்ணே. 41 தாடுபத்திரிச் சங்தையிலே - ஏலங்கிடி லேலோ தாழம்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக் கேது வேணும் கண்ணே. 42 ரோட்டோரத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ ரோசாப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. 43