பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மலை அருவி பாவநாசம் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ பாதசாம் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 60 ஒலவக்கோட்டுச் சந்தையிலே-ஏலங்கிடி லுேலோ ஒட்டியாணம் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 6 : வைகையாற்று ஓரத்திலே-ஏலங்கிடி லேலோ கைவளையல் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 62 மோருக்கடைப் பக்கத்திலே-ஏலங்கிடி லேலோ மோதிரங்கள் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே, 6# மயிலாடியூர்ச் சங்தையிலே-ஏலங்கிடி லேலோ மயிர்மாட்டி வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 64 வந்தவாசிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ வைரக்கல்லு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 65 சத்திரப்பட்டிச் சந்தையிலே-ஏலங்கிடி_லேலோ சாடு ஒண்ணு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ண்ே. 66 பட்டுக்கோட்டைச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ பதக்கம் ஒண்ணு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 67