பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 155 சந்தனத்தேவன் பேருமை எல்லாரு காடுதானும் - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற காட்டுக்காடு-ஏலங்கிடி லேலோ, 1 சந்தனம் காடுதானும் - ஏலங்கிடி லேலோ சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ. 2 எல்லாரு வீடுதானும் ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ. 3 சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ, 4. எல்லாரும் கட்டும்வேட்டி - எலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற மல்லுவேட்டிஎலங்கிடி லேலோ. 5 சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ சரியான சரிகைவேட்டி - ஏலங்கிடி லேலோ. 6 எல்லாரும் போடும் சட்டை - ஏலங்கிடி லேல்ோ ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7 சந்தனம் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ , சரியான பட்டுச்சட்டை - எலங்கிடி லேலோ. 8 எல்லாரு திருட்டுத்தானும் ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற ராத்திருட்டு - ஏலங்கிடி லேலோ. 9 சந்தனம் திருட்டுத்தானும் ஏலங்கிடி லேலோ சரியான மாயத்திருட்டு - எலங்கிடி லேலோ. 10 எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ ஏழைக்கேற்ற பெருநெல்சோறு - ஏலங்கிடி லேலோ, 11 சந்தனம் தின் அம்சோறு ஏலங்கிடி லேலோ - சரியான சம்பாச்சோறு ஏலங்கிடி லேலோ 12