பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு நெட்டை நெட்டை-ஏலேலோ பனமரமே - ஐலசா நீ இப்படி - ஏலேலோ என் வளர்ந்தாய் ஐலசா. காலையிலே - ஏலேலோ வந்த பெண்கள் . ஐலசா கானலிலே - ஏலேலோ காய்கிருேமே -ஐலசா. விடியலிலே துலேலோ வந்த பெண்கள் ஐலசா வெய்யிலிலே ஏலேலோ வேகிருேமே ஐலசா. மண்வெட்டிக்காரா-ஏலேலோ மாயாவி - ஐலசா மண் வெட்டி விட்டு-ஏளேலோ வேலேவிடு ஐலசா. பிக்காசுக்கா ரா.ஏலேலோ பெரும்பாவி - ஐலா பிக்காசுவிட்டு - ஏலேலே வேவிேடு - ஜல்சா. கொத்தனுரே - ஏலேலோ கொடும்பாவி - ஐலசா கொத்தைநிறுத்தி-ஏலேலோ வேலைவிடு - ஐலசா. ள்ளுக்காரா ஏலேலோ முறிந்த காலா - ஐலசா முள்ளேவிட்டு - ஏலேலோ வேலேவிடு - ஐலசா. கச்சன் மாரு ஏலேலே வேலை விட்டு ஐலசா தனி வழியா - எலேலோ போருங்களே - ஐலசா. கொல்லன்மாரு ஏலேலோ வேலேவிட்டு ஐலசா கொடி வழியா - ஏலேலோ போருங்களே - ஐலசா. ஏழுமலை - ஏலேலோ ஏறிப் போய் - ஐஸ்சா ஏலமலை - ஏலேலோ ஏறுங்கடி - ஐலசா. சாமைகுத்தி - ஏலேலோ சாறு காய்ச்சி - ஐலசா நாமெல்லாரும் ஏலேலோ கடந்திடலாம் - ஐலசா. கட்டுச் சோற்றுக்-கேலேலோ கம்பங்கஞ்சி - ஐலசா கடலேத்துவையல்-ஏலேலோ கலங்கிடலாம் - ஐலசா. காட்டுக்குள்ளே ஏலேலோ கடையுமில்லை - ஐலசா கடையிருந்தால் - ஏலேலோ கஞ்சியில்லே - ஐலசா. வrற வேளைக்கே-எ லேலோ தாராளமா - ஐலசா வாங்கலாண்டி '. ஏலேலோ சாமானமே ஐலசா. 171 2. 6 10