பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை அருவி ஜம்புலிங்கம் புகழ் மாந்தோப்புக் குள்ளேபோயி மலையாளம் எல்லாம்பேசித் தென்னந்தோப்புக் குள்ளேபோயி செந்தமிழும் நல்லாப்பேசி வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். எப்.ஏ.பி.ஏ. படித்து எப்போதும் இங்கிலீஷ்பேசி தப்பாமே தாய்ப்பாஷையும் சிப்பாய்போலே கான்படித்து வாரார்சொக்கத் தங்கம் - சம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஆளிலே அழகானவன் ஆசார போசனவன் தோள்கள் பருத்தமன்னன் தொடைஉருண்டு திரண்டமன்னன் வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். முறுக்கிவிட்ட மீசையோடே முன்னம்பல் வரிசையோடே மினுக்கிவைத்த கத்தியோடே மின்னுங்கையில் வெடிகளோடே - வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். தாய்பிள்ளை எல்லாம்விட்டுத் தன்வீட்டையுங் கூடவிட்டுக் தர்மத்தை மனசில்வைத்துத் தைர்யத்தைக் கையில்பிடித்து வாரார்சொக்கத் தங்கம் - சம்ம காடார்ஜம்பு லிங்கம்.