பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 221 அஞ்சாதே கலங்காதே - கண்ணே உன்னே அரண்மனையே காவல்காக்கும். பஞ்சுமெத்தை பட்டுமெத்தை - கண்ணே உனக்குப் - பரமசிவன் கொடுத்தமெத்தை. 30 மாமனர் கொடுத்தமெத்தை - கண்ணே உனக்கு மல்லிகைப்பூச் செண்டுமெத்தை. f அக்கா கொடுத்தமெத்தை - கண்ணே உனக்கு அழகான தங்கமெத்தை. மேலு வலிக்காமே - கண்ணேே மெத்தைமேலே படுத்துறங்கு.


...ه

மீன் பாட்டு அயலூர்க் குளத்திலேதான் கண்ணே அயிரைமீனு ஆயிரமாம். அயிரைமீன் பிடிக்கப்போய் - கண்ணே உன் அப்பன் இப்போ வந்திட்டாரே. அயிரைமீனும் ஆரல்மீனும் - கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு. வாளைமீனும் வழலேமீனும் - கண்ணடி விதவிதமா அம்புட்டுச்சாம். அரண்மனைக்கு ஆயிரமாம் - கண்ணே உன் அப்பனுக்கு ஆயிரமாம். - 5 ஆயிரமும் கொண்டுபோய்க் - கண்ணடி அப்பன்விற்று வீடுவர - அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்ணடி ஆச்சரியப் பட்டார்களாம். ‘... கெண்டைமீனும் கெளுத்திமீனும் - கண்ணடி குரவைtலும் பாவை மீனும் - -