பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 231 மல்லிகைப்பூ விற்றவுடன் - உன்மாமன் மாலைசெஞ்சு வருவாரு. 15 வைகை பெருகிவரரீ - கண்ணே வாஇளமீன் துள்ளிவரத் துள்ளிவந்த மீனுக்கெல்லாம் - உங்கப்பன் துாண்டில்வளே போட்டாரு. பச்சைமூங் கில்வெட்டிக் - கண்னே பசுமூங்கில் நாருளிச்சுக் காட்டுக் கரும்பே - கண்ணே கணுவில்லாச் செங்கரும்பே வேலிக் கரும்பே - கண்ணே வி8லயில்லா மாணிக்கமே - 20 சாய்ந்து கணக் கெழுதுவார் - கண்ணே சமத்துள்ள உன்தகப்பன். குந்திக் கணக்கெழுதும் - கண்ணே கோபாலனே உன்மாமன்? வாழைவச்சேன் கரும்புவச்சேன் - கண்ணே வாழைக்குள்ளே தேனேவச்சேன். தேன்.எடுக்கப் போகையிலே - கண்ணே தேனிவந்து கொட்டிருச்சு. - மூணு துட்டுக் கறியெடுத்துக் கண்ணே முட்டியிலே ஆணங்காச்சி - 25 எலும்பு விழுகலேண்னு - கண்ணே எட்டி உதைக்கிறையோ குழம்புனக்குப் பத்தலேண்ணு கண்ணே கோவங்கூட வந்திடுமோ ? மாமன் பரிசு ஆராரோ ஆராரோ - கண்ணேே ஆரிரரோ ஆராரோ.