பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மலே அருவி கண்ணே உறங்குறங்கு கண்ணே நீ கானகத்து வண்டுறங்கு. பொன்னே உறங்குறங்கு பொன்னேt பூமாத்து வண்டுறங்கு. சீராடத் தொட்டிலிலே கண்ணேt என்மேல்ே சாய்ந்தாடப் பொன் துளரி மேலிருந்து - கண்ணே நீ பொய்யுறக்கம் கொண்டாயே. o § மதுரையிலே கூடாரம் - உங்கமாமன் மல்லிகைப்பூ யாவாாம். மல்லிகைப்பூ விற்றவுடன் - உன்மாமன் மாலேஒண்னு கொண்டாருவார். கோடையிலே கூடாரம் - உன் மாமன் கொத்துமல்லி யாவாரம். கொத்துமல்லி விற்றவுடன் - உங்கமாமா கொலுசுபண்ணிக் கொண்டாருவார். நோயும் மருத்தும் ஆராரே ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. இருமக்கூடச் சத்தில்லையோ கண்மணியே இடிஇடித்த சத்தத்திலே ? சாரல்மழை பெய்யுதம்மா - கண்மணியே சனங்களெல்லாம் ஒடுதம்மா. நெஞ்சுச்சளி பிடிச்சுக்கிட்டுக் கண்ணே உனக்கு - கிற்கக்கூடச் சத்தில்லையோ? மண்டையிடி பொறுக்கலையோ - கண்ணே உனக்கு மருந்துாைத்துப் போடட்டுமா ? 5 கோரோசனே கொடுக்கட்டுமா - கண்ணே உனக்குக் குருமாத்திரை கொடுக்கட்டுமா ?