பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 233 உடம்பெல்லாம் நோகுதம்மா - கண்ணே உனக்கு ஒத்தடம்கான் கொடுக்கட்டுமா ? ஏலமும் இஞ்சிச்சாறும் - கண்ணே உனக்கு எட்டுச்சொட்டுக் கொடுக்கட்டுமா ? மண்டையிடித் தைலங்கடடக் - கண்ணே உனக்கு மாமன்வாங்கி வாராரு. தொந்தரவு செய்யாமேரீ - கண்மணியே தொட்டியிலே தாங்கிடம்மா. 10 மயங்காதே கலங்காதே - கண்ணே உனக்கு மாரியாத்தாள் சுகங்கொடுப்பாள். கைகாலு வீச்கத்துக்கு - கண்ணே உனக்குக் கணேஎண்ணெய் வாங்கித்தாரேன். மலைபோலே வந்தாலும் - கண்மணியே பணிபோலே விலகிடும்மா. அம்மாவாசி போயிடுச்சுக் - கண்ணே நீ அஞ்சவேண்டாம் ஒண்ணுக்குமே. ஆயாசமா இருக்குதம்மா - கண்ணேகாளி யம்மாஉன்னேக் காப்பாளம்மா. 15 பழனியாண்டவன் கோயிலுக்குக் கண்ணேநாம் பங்குனிமாசம் போகலாமே. நேத்திக்கடன் முடியெடுப்பைக் - கண்ணே நாம் கிறைவேற்றி வரலாமம்மா. வயிற்றுளேச்சல் மிஞ்சிப்போய்க்-கண்ணே உனக்கு வயிற்றுவலி வந்திருச்சா ? . வெற்றிலையும் உப்பும்வச்சுக் - கண்மணியே வெறும்வயிற்றில் தின் னுடம்மா. குடலேற்றம் என்றிட்டாலும் - கண்ணேகறுப்பி குடல்தட்டுவாள் பயப்படாதே. 20