பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மலே அருவி 'காங்கு” ராரோ ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. கண்ணே நவமணியே கண்ணே நீ கானலிலே பிறந்தாயோ ? என்ன நான் சொல்வேனே . கண்ணே நீ இந்திரனே சொல்லிவிடு ? கொட்டிவைத்த முத்தே கண்ணே நீ - குவித்துவைத்த ரத்தினமே கட்டிப் பசும்பொன்னே கண்ணே நீ கட்டிமுத்தம் கொடுப்பாயே. 5 சிரியம்மா சிரிச்சிரு - கண்ணே நீ சித்திரப்பூங் தொட்டியிலே. கரும்பு ரசமே - கண்ணே நீ கசக்காத கல்கண்டே ஆராரோ ஆராரோ - கண்ணே நீ ஆறுமுகன் பிறந்தானே ? மாத்துயர்ந்த பொன்னே-கண்ணே நீ மண்டலத்து ராசாவோ ? பூத்த புதுப்பூவே - கண்ணே உன் பொக்கிசத்தைப் பார்த்தாயோ ? 10 மானே மருக்கெழுந்தே - கண்ணே நீ மலர்விரிந்த மல்லிகைப்பூ. காட்டுக் குயிலே - கண்ணே நீ கண்டெடுத்த பாட்டுக்குயில், புள்ளேக்கலி தீர்க்கவந்த கண்ணே என் பொன்மானே தாங்கம்மா, மாயன் மகளுக்குக் - கண்ணேt மாப்பிள்ளையாய் வந்தவனே ?