பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 235 தாய்சொல்லைத் தட்டாதே - கண்ணே நீ தகப்பன் சொல்லைத் தவருதே. 15 சீதைக்கு அதிபதியோ - கண்ணே நீ சிலேயேந்தும் ரகுபதியோ ? ஒருமாங்கனிக்குக் - கண்ணேநீ உலகமெல்லாம் சுற்றினையோ ? பெருமான் மருமகனே - கண்ணேே பெண்ாதிக்கு மாப்பிள்ளையோ ? கருப்புச் சிலையானே - கண்ணே நீ கன்னிவள்ளி நாயகனே ? பரமசிவ னே அடித்த - கண்ணே நீ பாண்டியன் நீதானே ? 20 ஆாடித்து அேழுதாய் - கண்ணே நீ அழுதகண்ணிர் வடிகிறதே. பேரைநீ சொல்லிவிடு - கண்ணே அவனைப் பெருவிலங்கு போட்டிடுவேன். அத்தை அடித்தாளோ - கண்ணேே அழுதகண்ணேத் துடைத்தாளோ ? கொஞ்சம் பொறுத்துக்கொள் - கண்ணே நான் சந்திரனேக் கூப்பிடுறேன். பாட்டி அடித்தாளோ - கண்ணே உனக்குப் பால்ஊற்றும் கையாலே ? 25 கூப்பிட்டுநான் கேக்கட்டா - கண்ணேநான் கொஞ்சம்.அவளேப் பார்க்கட்டா ? மாமிஅடித்தாளோ - கண்ணே உனக்கு மைவைக்கும் கையாலே ? தம்பி அடித்தானே - கண்ணே உனக்குத் தயிர்ஊற்றும் கையாலே ? அக்காள் அடித்தாளோ ? - கண்ணே உன் அம்மான்மார் வைதார்களோ ?