பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மலே அருவி வீம்புக்கு ஏன்தேம்புருய் - கண்ணே நீ வீணுக என்தேம்புருய் ? 30 பெரியம்மா அடித்தாளோ - கண்ணே உன்னைப் பெற்றவள்தான் அடித்தாளோ? அறியாமே செய்தாலும் - கண்ணே நீ ஆர்கிட்டேயும் சொல்லாதே. தொட்டிக்குள்ளே துள்ளித்துள்ளிக் - கண்ணேவன் துரையேநீ தாங்கிடம்மா. ஆலம் பூப்போலே - கண்ணே நீ அத்திமரப் பூப்போலே தேம்பி அழுகாதே - கண்ணேஎன்னைத் திட்டிக்கிட்டு இருக்காதே. 35 வாடாத பூவே - கண்ணே நீ வானத்திலே தாராவோ ? தேடாத திரவியமோ - கண்ணே நீ தெவிட்டாத தெளிதேனே ? கோட்டை அதிகாரி - கண்ணே உன் கொடிபறக்கு தாகாசம். கேட்டதெல்லாம் நான்தருவேன் - கண்ணே நீ கெஞ்சாமே கொஞ்சிக்கேளு. ஆனேவிற்கும் வர்த்தகனம் - உன்மாமன் சேனைக்கெல்லாம் அதிகாரியாம். 40 சின்னண்ணன் வந்தானே - கண்ணே உனக்குச் சின்னச்சட்டை கொடுத்தானே ? பட்டுஜவுளிகளும் - கண்ணே உனக்குப் பலவர்ணச் சட்டைகளும் பட்டுப்புடைவைகளும் - கண்ணே உனக்குக் -- கட்டிக்கிடக் கொடுத்தானே ? பொன்னல் எழுத்தாணியும் - கண்ணே உனக்கு மின்ைேலப் புஸ்தகமும்.