பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 243 களேத்துப்போன நேரத்திலே - கண்ணேமனிதர் கள் இறக்கிக் குடிப்பாங்களாம். 80 தென்னம்பிள்ளை நட்டவங்க கண்ணே அதுக்குத் தினந்தோறும் தண்ணிஊற்றிப் புள்ளையைப்போல் பொத்திப்பொத்திக்-கண்ணேநல்ல பொறுமையோடே வளர்ப்பாங்களாம். இடைக்கிடையே களையெடுத்துக் கண்ணே அதை இடைவிடாமே பாப்பாங்களாம். பட்டமட்டை எல்லாத்தையும் கண்ணே அவர் பதமாத்தாலும் தறிப்பாங்களாம். ஒஇலக்கெல்லாம் காசுதானம் - கண்ணே அந்தப் பாளைக்கெல்லாம் காசுதானம். 85 மட்டைக்கெல்லாம் காசுதானும்-கண்ணேதென்னங் கட்டைக்கெல்லாம் காசுதானம். - விட்டத்துக்கும் காசுதானம் - கண்ணேதென்னஞ் சட்டத்துக்கும் காசு காணும். சிற்றுத்தேங்காய்க்கும் காசுதானம் - கண்ணே அந்த நெற்றுத்தேங்காய்க்கும் காசுதானம். அடிதொடங்கி நுனிவரைக்கும் - கண்மணியே அல்லாத்துக்கும் காசுதானம். மாங்காயும் தேங்காயும் கண்மணியே மச்சினன் மாமன் போலிருக்காம். 90 மாங்காய்க்கும் கொழுத்தகாசு - கண்மணியே தேங்காய்க்கும் கொழுத்தகாசு. மத்தியான்ன வேளையில்தான் - கண்ணே நல்ல மதிப்பிருக்கும் தோப்புக்கெல்லாம். பொடிபொசுக்கும் நேரமெல்லாம் 'கண்ணேமனிதர் போவாங்களாம் மாந்தோப்புக்கு. கானலிலே காட்டுமாங்காய் - கண்மணியே கண்டையாடி பொன்மயிலே ?