பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 245 நல்லபழம் நல்லபழம் - கண்மணியே நாமெல்லாம் தின்னும்பழம். பறந்துபோற குருவியெல்லாம் - கண்மணியே பற்றிகல்லாத் தின்னும்பழம். 10 ශ්H கட்டின கதை குச்சுவிடும் பற்ருமே - கண்மணியே கூரைவீடும் பற்ருமே சின்னவீடும் பற்ருமே - கண்மணியே மண்ணுவீடும் பற்ருமே இரண்டடுக்கும் பற்ருமே - கண்மணியே - ஏழடுக்கு மெத்தைகட்ட அப்பாபட்ட பாட்டைப்பார்த்தால் - கண்மணியே அழுகைகட்ட வருதெனக்கு, - காலையிலே எழுந்திருச்சுக் - கண்மணியே கால்கையெல்லாம் கங்கையிலே 5 மூஞ்சிமுகம் எல்லாமுமே கண்மணியே முடக்கம் ஒண்ணும் இல்லாமலே கழுவிச்சுத்தம் பண்ணிக்கிட்டுக் - கண்மணியே கடவுளேயும் கும்புட்டுட்டுக் கம்மான்செம்மான் கிட்டப்போய்க் - கண்மணியே கட்டடத்தைப் பற்றிப்பேசிப் போயன்மார் கிட்டப்போய்க் - கண்மணியே பொழுதெல்லாம் பழமைபேசிச் சேர்வைகாரர் கிட்டப்போய்க் - கண்மணியே சிற்ருளைப் பற்றிப்பேசி 10 மரக்காரர் கிட்டப்போய்க் - கண்மணியே மரச்சங்கதி யெல்லாம்பேசிச் சிவனுண்டி கிட்டப்போய்க் - கண்மணியே செங்கல்லைப் பற்றிப்பேசிச்