பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மலை அருவி கன்றுபோற வழியிலேநான் - கண்மணியே கல்கிணறு கட்டிவைத்தேன். {{} மலடிகைத் தருமமென்று - கண்மணியே மாடுதண்ணி குடிக்கலேயே! மாடுபோற வழிமேலேகான் - கண்மணியே மணிபோல வைக்கோல்போட்டுவைத்தேன். மல்டிகைத் தருமமென்று கண்மணியே மாடுவைக்கோல் தின்ன இலயே! ஆனிமாசம் வாங்கிவிட்ட கண்மணியே அழகான பசுவும்மலடு. குப்பையிலே மேய்ந்துவரும் - கண்மணியே கோழிகூடத் தான்மலடு. 65 மாமன்மச்சான் ஏசினங்க - கண்மணியே மற்றவர்கள் ஏசினங்க. அண்ணன்தம்பி ஏசினங்க . கண்மணியே அக்காஅத்தை ஏசினங்க. மதனிகொழுந்தி ஏசினங்க கண்மணியே சதிகினேத்துப் பேசினங்க. சிற்றப்பன்விட் டாருங்கூடக் - கண்மணியே சிரிக்கவும் இடமானேனே! மந்தையிலே படுத்துறங்கும் - கண்மணியே மாடுகன்றெல் லாம்மலடு. 70 வேலிப்பக்கம் மேய்ந்துவரும் - கண்மணியே வெள்ளாடெல் லாம்மலடு. காடெல்லாம் சுற்றிவரும் - கண்மணியே கருகாயுந் தான்மலடு. என்முகத்தி லேவிழித்த கண்மணியே எதிர்த்தவீட்டுப் பெண்மலடி. .." . , அண்டைவீடெல் லாம் மலடு - கண்ணேஎன்ன அடுத்தவரெல் லாம்மலடு,