பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு -ബ് இத்தனையும் மலடாயிருக்கக் - கண்மணியே எத்தனே பாவம் நான்செய்தேனே! 75 உங்கப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே உலகமெல்லாம் சுற்றிப்போைேம். காடென்ன வனமென்ன - கண்ணேநாங்கள் கண்டபடி அலேகையிலே காட்டுரிஷி கண்ணேமூடிக் - கண்மணியே கடவுள் தவஞ் செய்கையிலே கண்டோமம்மா தவமுனியைக் - கண்ணே அவர் காலிலேதான் விழுந்தோம்.அம்மா. தவம்முடித்து ஜபம்முடித்துக் - கண்மணியே தந்தாரம்மா மாங்கனியும். 8() மந்திரமும் உச்சரித்துக் - கண்மணியே மாங்கனியைத் தந்தாரம்மா. வலம்புரியும் இடம்புரியும் - நாங்கள் சுற்றி வந்தோமம்மா முனிவர்பக்கம். திருநீறையும் பன்னிரையும் - எங்கள் மேலே தெளித்தாரம்மா முனிவர்தானும். தலைமேலே கையைவச்சுக் - கண்மணியே தந்தாரம்மா ஆசீர்வாதம். சரியான காலத்திலே - கண்ணே உன்னேச் சந்தோசமாக் கண்டோம்.அம்மா. - 85 பிேறந்த நாள்முதலாக் - கண்ணேஎன் - கிந்தனையும் மாறிற்றம்மா. மலடிபெற்ற மலட்டுவரம் - கண்மணியே மங்கிற்றம்மா அன்றுமுதல். சீர்குலக்கப் பார்த்தவங்க - கண்மணியே சீரழிந்தார் என்கண்முன்னே. வெட்கப்படுத்தப் பார்த்தவங்க - கண்மணியே வெட்கப்பட்டுப் போனரம்மா.