பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் 367 என்ன பனே ? தாளிப்பனே. என்ன தாளி ? விருந்தாளி. என்ன விருந்து மணவிருந்து. என்ன மணம் பூமணம். என்ன பூ ? மாம்பூ. என்ன மா ? அம்மா. 3 உன்பேர் என்ன ? - பேரிக்காய், உன் ஊர் என்ன ? - ஊறுகாய். உன்ஜாதி என்ன ? - ஜாதிக்காய். 4 ஆண்டி ஆண்டி என்ன ஆண்டி பொன்னுண்டி. என்ன பொன் ? - காக்காய்ப்பொன். என்ன காக்காய் ? - அண்டங்காக்காய். என்ன அண்டம் - பூஅண்டம். என்ன பூ ? - பனம்பூ. என்ன பனே ? - தாளிப்பனே. என்ன தாளி - நாகதாளி. என்ன நாகம் ? . சுத்தநாகம். என்ன சுத்தம் ? - வீட்டுச்சுத்தம். என்ன வீடு f - ஒட்டுவீடு. என்ன ஒடு ? - பாலோடு. என்ன பால் ? - நாய்ப்பால், என்ன நாய் ? - வேட்டைநாய். என்ன வேட்டை ? - பன்றிவேட்டை. என்ன பன்றி ? - ஊர்ப்பன்றி. என்ன ஊர் ? - கிரைஊர். என்ன கீரை அறைக்கீரை. என்ன அறை பள்ளியறை. என்ன பள்ளி ? - மடப்பள்ளி. என்ன மடம் ? - ஆண்டிமடம். என்ன ஆண்டி ? - பொன்ண்ைடி