பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி பூமியைகான் நம்பியல்லோ - ரெண்டு புள்ளைகளைப் பெற்றெடுத்தேன் பூமிசதி பண்ணிடுச்சே - என் புள்ளே தொப்பை வாடிருச்சே ! மானத்தைநான் நம்பியல்லோ - ரெண்டு மக்களேநான் பெற்றெடுத்தேன் மானம்சதி தான்பண்ணுதே - என் மக்கள்தொப்பை வாடுதே ! குருவி சலித்ததென்ருல் - அது காதத்துக்குக் காதம்போகும் பொண்ணு சலித்தேனென்ருல் - கான் எங்கேதான் போய் ஆறுவேன் ! காக்காய் சலித்ததென்ருல் - அது காதத்துக்குக் காதம்போகும் மங்கை சலித்தேனென்ருல் - நான் எங்கேதான் போய்ஆறுவேன் ! மானம் சலித்ததென்ருல் - அது மண்மேலே மழைஊற்றும் பொண்ணு சலித்தேனென்ருல் . நான் எங்கேதான் போய் ஆறுவேன் ! சமைந்தபெண் சலித்ததென்ருல் - அவள் சாக்கடைதுணரங் தான்போவாள் மங்கை சலித்தேனென்றல் - தான் எங்கேதான் போய்ஆறுவேன் ! ஒப்பாரி காசிக்குப் போனதுண்டு - கான் கைவிளக்கைத் தொட்டதுண்டு கைவிளக்கைத் தொட்டபாவம் - என் கணவனுக்குப் பட்டதம்மா 14 15 16 17 18 19