பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11.


கவிஞர் அக்கினிபுத்திரன் இந்தக் கவிதைத் தொகுப்பின் ஆய்வுரையில் தெளிவாக சில கருத் துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


"தனிமனிதனின் அவலத்தை இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகள் அகவயப்பட்ட நடையில் வெளிப்படுத்துகின்றன.ஓயா அலைச்சலில் ஒழிவிலாப் பயணத்தை மறந்த பயணியை இக்கவிதைகள் காட்டுகின்றன. அவரின் அமைதிப் பாழில் சோக மலர்கள் நாள்தோறும் உதிர்கின்றன."

"மலையருவியின் கவிதைகளில் கடந்த காலக் கசப்பு இன்னும் திகட்டாமலே இருக்கிறது. தன்னை வெல்லாத நானை அவர் நம்பத் தயாராக இல்லை."

"நவீன இயந்திர இரைச்சல் மிக்க நகர வாழ்வின் வேடமிட்ட போலிமைகள் எழுப்பும் அர்த்தமற்ற சப்தங்கள், ஆரவாரங்கள் ஒரு மனிதனின் உள்ளிருந்தெழும் நாதத்தை மாய்த்துவிடும் சூழலை மலையருவியின் கவிதைகள் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. சந்தடி, இரைச்சல், கூச்சல், குழப்பம்,தன்னிலைநெருக்கடி, வெறுமை, ஏக்கம், தேடல், தேடல் சிக்கல், தேடின் சிக்கல் ஆகியவற்றால் மனிதன் இன்று உள்ளொடுங்கி விடும் விபரீத விபத்து ஓயாது நிகழ்கிறது. இதற்குக் கவிஞனும் விதிவிலக்கல்ல. அவன் ஏணி என்று நினைத்து ஏறியவை அனைத்தும் இன்று குச்சி களாகிக் கள்ளிகளாகத் தெரிகின்றன. பற்றிக்