பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

 உலகில் தேடி அலுக்கிறார்கள். உண்மையைப் புரிந்து கொள்ளும் ஞானம் ஏற்பட்டதும், மாபெரும் இன்பநிலை கிட்டிவிடும்.

இவ்வாறு ஞானிகள் சொல்லியிருக்கிறாகள். இந்தத் தரிசனம் பற்றி எழுத்தாளர் வா.ச.ரா. பல இடங்களில், அவருடைய நடையில், அழகாக எழுதியிருப்பது நினைவில் நிற்கிறது.

"நான்" என்று அந்த அரிய அனுபவத்தைக் கூறும் நபர் விவரிக்கிறார். ஒரு கனவு நிலை, எங்கிருத்தோ ஒரு இனிய நாதம் - அற்புத கானம் - எழுகிறது. அவர் அதைத் தேடித் திரிகிறார். நிலா ஒளி படித்த, பனிமேகங்கள் குன்றுகளாய் நிமிர்த்த, பல்வேறு அழகுகள் மிகுந்த இடங்களில் எல்லாம் அவர் தேடி அலைகிறார். அந்த நாதம், எங்கிருந்து வருகிறது என்று தெரியாது, ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. முடிவில் ஒரு வெட்ட வெளி, அவர் நின்று விடுகிறார். அந்த அற்புத கானம் தன்னுள்ளிருந்தே எழுந்து இன்ப அலைகளாய்ப் பரவுகிறது என்பதை உணர்கிறார். ஆனந்தப் பரவசம் அடைகிறார்.

அத்தகைய ஒரு ஞான அனுபவத்தைக் கவிஞர் மலையருவியும் விவரிக்கிறார் ஒரு கவிதையில்...

தூக்கிய காலைத்
திரும்பவும் புதை
நடப்பின் கடப்பில்
சிந்தனைச் சுடரைச் சிதைக்கும்
ஓசை