பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21

மனதை நசுக்குமந்த
மடிந்த கற்களினூடே
சிந்தனைப் பிணங்கள்
சிரிப்பை உமிழ்கின்றன.


(நெஞ்சில் நிறைந்த நினைவுகள்)


இவை சில உதாரணங்கள்.

இத்தகைய உருவகங்கள், (படிமங்கள்) கற்பனைகள் வகையரா கவிதை படிப்பவர்களுக்கு ஒரு வியப்பை, பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும். அதே வேளையில் புரியாக் குழப்பத்தையும் உண்டாக்கும்.

புதுக்கவிதை புரிவதில்லை; எளிதில் பொருள் விளங்குவதில்லை என்ற குறை கூறலும் குற்றச்சாட்டும் இப்பவும் இருந்து வருகின்றன. அதற்கு இத்தகைய படைப்புகள் வலுசேர்க்க உதவும்.

இவை பழங்காலச் சித்தர்களின் பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன என்றும் சொல்லாம். இந்த ரீதியில் எழுதப்படுகிற (உருவகங்கள்) படிமங்களில் புதுமை இருக்கிறது; இவை கவிதைக்குத் தனி அழகு சேர்க்கின்றன என்பதும் உண்மை தான். பொருள் பொதிந்த இத்தகைய வரிகள் கற்பனை வளத்துக்கும் தனித்த புதுமையான பார்வைக்கும் சான்றுகள் ஆகின்றன எனவும் குறிப்பிடலாம்.

சூரியக் கிழவனின்
நரைத்த முடிகள்
கூரையின் இடுக்கில் நுழைகின்றன’